/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
விபத்தில் பலியான காவலர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதி
/
விபத்தில் பலியான காவலர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதி
விபத்தில் பலியான காவலர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதி
விபத்தில் பலியான காவலர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதி
ADDED : நவ 04, 2024 03:55 PM

மயிலாடுதுறை:விபத்தில் பலியான காவலர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதி- எஸ்.பி. ஸ்டாலின் வழங்கினார்.
மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தாருக்கு, தமிழக முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகையை மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா எடக்குடி கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன்.39. பாகசாலை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய இவர், அயல் பணியாக போலீஸ் பல் பொருள் அங்காடியில் பணியாற்றி வந்தார். கடந்த அக்.27ம் தேதி மதியம் பரந்தாமன் உணவு அருந்த டூவீலரில் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். சுந்தரப்பன்சாவடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்த பரந்தாமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த காவலருக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதனை அடுத்து மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த காவலர் பரந்தாமனின் மனைவி மாயாவிடம் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் வழங்கினார்.
உயிரிழந்த காவலர் பர்ந்தாமனின் பெற்றோர்கள், டிஎஸ்பி. திருப்பதி, பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி ஆகியோர் உடன் இருந்தனர்.