ADDED : ஜூன் 29, 2026 09:39 PM

அ நிறம் | அளவு
மயிலாடுதுறை:
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் பக்தர்கள் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆனி பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கிழக்கு ராஜகோபுரம் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சந்நிதியில் வழிபாடு செய்த பக்தர்கள் கீழ வீதி வழியாக தெற்கு வீதி,மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தனர்.
கிரிவலத்தின் போது ஆபத்து காத்த விநாயகர், கணநாதர்,சொர்ணாகர்ஷன பைரவர், சித்திவிநாயகர், கோமளவல்லி அம்மன் ஆகிய கோயில்களில் கிரிவல பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்டு, சிவாய நம ஓம் என பஞ்சாக்ஷரம் மந்திரம் உச்சரித்த வாறே சென்றனர்.
