/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
நகர மன்ற கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
நகர மன்ற கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
நகர மன்ற கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
நகர மன்ற கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : பிப் 16, 2024 07:31 PM

மயிலாடுதுறை:சீர்காழி நகர மன்ற கூட்டத்தில் இருந்து திமுக பெண் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நேற்று நகர் மன்ற சாதாரண கூட்டம், தலைவர் துர்கா பரமேஸ்வரி திமுக. தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாமக , சுயேச்சை உள்ளிட்ட நகர்மன்ற கவுன்சிலர்கள் பங்கேற்று தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை தேவைகள், வசதிகள் குறித்த கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினர். வாயில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டுகூட்டத்தில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள் வள்ளி, ரம்யா, ரேணுகாதேவி ஆகிய மூவரும் தங்கள் வார்டுகளுக்குட்பட்ட பகுதிக்கு தேவையான சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த 2 ஆண்டுகளாக செய்துதரப்படவில்லை, நகர் மன்றத் தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவார் என குற்றம் சாட்டியதுடன், கூட்ட அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த 3 திமுக கவுன்சிலர்களும் நகர மன்ற தலைவருக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.