/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
டி.எஸ்.பி., சஸ்பெண்டால் களைகட்டிய மது விற்பனை
/
டி.எஸ்.பி., சஸ்பெண்டால் களைகட்டிய மது விற்பனை
ADDED : ஜூலை 22, 2025 12:32 AM

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக இருந்த சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு, காவிரி கரை பகுதி டாஸ்மாக் கடை அருகே, நேற்று காலை திறந்த வெளி பார் திறக்கப்பட்டு, அட்டைப்பெட்டிகளில் வைத்து டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்கப்பட்டன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
நேற்று முன்தினம் இரவு, டாஸ்மாக் கடை மூடப்படும் நேரத்தில், கடை ஊழியர் ஒத்துழைப்புடன் மது பாட்டில்கள், சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
தகவலறிந்த எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவில், மதுவிலக்கு பிரிவு போலீசார் விரைந்து, சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூவலுார் கிராமத்தை சேர்ந்த செல்வம், 42, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 25 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டி.எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்ட மறுநாளே, சட்டவிரோத மது விற்பனை தொடங்கி விட்டதாக சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.