தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ எஸ்.ஐ.,யை வெட்டிய விவசாயி கைது

எஸ்.ஐ.,யை வெட்டிய விவசாயி கைது

எஸ்.ஐ.,யை வெட்டிய விவசாயி கைது


ADDED : நவ 02, 2024 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2024 02:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை:சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காத்திருப்பு வடக்கு அஞ்சாமனை பகுதியை சேர்ந்தவர் அகோரமூர்த்தி, 54; வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டின் அருகே வசிப்பவர் ராமதாஸ்,50; விவசாயி. இவரது மனைவி பிரிந்து சென்றதற்கு, அகோரமூர்த்தியே காரணம் என முன்விரோதம் கொண்டிருந்தார்.இதன் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த அகோரமூர்த்தியை, ராமதாஸ் அரிவாளால் வெட்டினார்.

அதில் படுகாயமடைந்த அகோரமூர்த்தியை அவரது உறவினர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, சீர்காழி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து, ராமதாசை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us