
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் அருகே பாதரக்குடி கிராமத்தில் ரயிலில் அடிபட்ட நிலையில் மூன்றரை வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே போலீசார் இறந்த கிடந்த மானை கைப்பற்றி சீர்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் மானை எடுத்துச் சென்று, சீர்காழி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்த பின்னர் கொள்ளிடம் காப்பு காட்டில் புதைத்தனர்.

