/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை
/
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை
ADDED : நவ 19, 2024 09:15 PM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஏ.த.மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி வங்க கடல் பகுதியில் நவ.22-ல்குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால்,
நவ.21-ம் தேதி இரவு முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம். மேலும் கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடி படகுகளும் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவிப்பினை மீறி கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.