தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ நான்கு வழிச்சாலை பணிகள் நிறுத்தம்

நான்கு வழிச்சாலை பணிகள் நிறுத்தம்

நான்கு வழிச்சாலை பணிகள் நிறுத்தம்


ADDED : நவ 08, 2024 02:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 02:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீர்காழி: விழுப்புரம்- நாகை இடையே ரூ 7 ஆயிரம் கோடி மதிப்பில் 180 கிமீ தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதில் கொள்ளிடம் முதல் சூரக்காடு வரை பணிகள் நிறைவடைந்த நிலையில் சூரக்காடு முதல் தரங்கம்பாடி வாயிலான சாலை அமைக்கும் பணி மந்தகதியிலேயே நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை டில்லியைச் சேர்ந்த வில்ஸ்பன் நிறுவனம் மற்றும் துணை நிறுவனமான எஸ்பிஎல். நிறுவனமும் செய்து வருகின்றன. இந்நிலையில் தென்னாலகுடி- வைத்தீஸ்வரன் கோவில் இடையே செல்லும் கிராம சாலையின் குறுக்கே நான்கு வழிச்சாலைக்கான உயரம் குறைவான சப்வே அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் அறுவடை இயந்திரங்கள், விவசாய பயன்பாட்டிற்கான வாகனங்கள், பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் அதன் உயரத்தை கூட்டி மேல்மட்ட பாலமாக அமைத்து தர அப்பகுதி மக்கள் தாசில்தார் முதல் கலெக்டர் வரை கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று (நவ.,08) நான்கு வழி சாலை பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்தகவல் அறிந்து வந்த நகாய் மற்றும் எஸ்.பி.எல்., நிறுவன அதிகாரிகள் பொதுமக்களிடம் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us