ADDED : ஜூலை 03, 2026 08:14 AM

அ நிறம் | அளவு
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 23 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மதுரையில் இருந்து சிதம்பரம் சென்ற அரசு பஸ், சென்னையில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பஸ் ஆகியவை மயிலாடுதுறையில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.
இரண்டு பஸ்களிலும் பயணித்த 23 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேர் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
