/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறையில் கனமழை சம்பா நெற்பயிர்கள் நாசம்
/
மயிலாடுதுறையில் கனமழை சம்பா நெற்பயிர்கள் நாசம்
ADDED : ஜன 14, 2026 06:39 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட் டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், மூன்றாவது நாளாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில், ஜன., 10ம் தேதி முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி, நேற்று காலை வரை தொடர் மழை பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், மாணவர்கள், பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தாழ்வான பகுதியில் நெல் வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மாவட்டத்தில், தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார் உள்ளிட்ட 28 கிராம மீனவர்கள் 3வது நாளாக நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
விசைப்படகுகள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் ஆறுகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கனமழையால், அறந்தாங்கி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த, 5,000 ஏக்கர் சம்பா நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

