/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை, புயல் பாதித்தால் மக்களை காக்க பேரிடர் மீட்பு படை வருகை

ADDED : அக் 16, 2024 02:19 PM

மயிலாடுதுறை:வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காத்தழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தின் காரணமாக மீன்வளத்துறை அறிவுறுத்தலின்படி இன்று 2வது நாளாக மாவட்டத்திலுள்ள 28 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை இதனால் 500 விசைப்படகுகள் மற்றும் 4800 பைபர் படகுகள் பாதுகாப்பாக ஆற்றின் முக துவாரங்கள், மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்பிலிருந்து நடவு செய்து சில நாட்களே ஆன சம்பா இளம் நெற்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர் கனமழை மற்றும் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் மக்களை பாதுகாக்க அரக்கோணத்திலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் 35 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி வந்துள்ளனர். இவர்கள் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நீர்மூழ்கி பம்புகள் உள்ளிட்ட 60 வகையான பாதுகாப்பு உபகரணங்களுடன் சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் பதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.