/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறை அருகே 9 கோவில்களின் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
மயிலாடுதுறை அருகே 9 கோவில்களின் கும்பாபிஷேகம் கோலாகலம்
மயிலாடுதுறை அருகே 9 கோவில்களின் கும்பாபிஷேகம் கோலாகலம்
மயிலாடுதுறை அருகே 9 கோவில்களின் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : செப் 16, 2024 01:26 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோலாகலமாக நடைபெற்ற முத்து மாரியம்மன் உட்பட 9 கோவில்களின் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அசிங்காடு கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதுபோல கிராமத்தில் விநாயகர், முருகன், மகாலிங்க சுவாமி, பிடாரி அம்மன், மன்மத சுவாமி, மண்ணடி வீரன், பேச்சியம்மன், நவகிரகத்திற்கு என தனித்தனி கோவில்கள் அமைந்துள்ளன. இந்த 9 கோவில்களில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவில் விமான கலசங்களுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தை சர்வ சாதகம் கோபால சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

