/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: மது போதையில் அலப்பறை செய்தவர் மீட்பு
/
மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: மது போதையில் அலப்பறை செய்தவர் மீட்பு
மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: மது போதையில் அலப்பறை செய்தவர் மீட்பு
மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: மது போதையில் அலப்பறை செய்தவர் மீட்பு
ADDED : மார் 08, 2025 09:05 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் பெட்ரோல் கேன் மற்றும் தீ பந்தத்துடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில் சவுடு மணல் குவாரி அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. இந்த குவாரியை தோப்பிருப்பு பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவர் நடத்தி வரும் நிலையில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட அதிக அளவு ஆழத்தில் சவுடு மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் 47 என்பவர் பலமுறை மனு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 08) அவர் மது போதையில் விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் கையில் பெட்ரோல் கேன் மற்றும் பந்தம் வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சவுடு மணல் குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் ரமேஷ் கீழே இறங்கினார். அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரிக்கின்றனர். ரமேஷின் தாயார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மகனை பார்த்து கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்தது.