தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புதிய யானை

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புதிய யானை

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புதிய யானை


ADDED : செப் 25, 2026 11:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 11:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய யானை வழங்கப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் சிறப்பு பூஜைகள் செய்து, யானைக்கு 'முத்தையா' என பெயர் சூட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது; கடந்த 2003ம் ஆண்டு, இந்த ஆலயத்திற்கு சொந்தமான தையல்நாயகி என்ற யானைக்கு மதம் பிடித்தது. பிறகு டாப்ஸ்லிப் யானையில் முகாமிற்கு அனுப்பப்பட்ட நிலையில், உடல்நல குறைவு காரணமாக அங்கு உயிரிழந்தது. புது யானை கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வெளி மாநிலங்களில் இருந்து யானை கொண்டு வருவதற்கு தமிழக வனத்துறையினர் தடையில்லா சான்று அளிக்காமல் இருந்தது; சமீபத்தில் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், தமிழகத்தில் 5 கோவில்களுக்கு யானைகள் வழங்க தடையில்லா சான்று வனத்துறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தருமபுரம் ஆதீனம் சார்பில், சென்னை சேவா டிரஸ்ட் மூலம் அசாமில் இருந்து ரூப் சிங் என்ற 13 வயது ஆண் யானை வாங்கப்பட்டு, கோவிலுக்கு இன்று (செப் 25) அழைத்துவரப்பட்டது.

தருமபுரம் ஆதீன 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் யானைக்கு சிறப்பு கஜ பூஜை செய்தனர். தருமபுரம் ஆதீனம் புதிய யானைக்கு முத்தையா என பெயர் சூட்டி பழங்கள் வழங்கிய பின், கோவில் நிர்வாகத்திடம் யானை ஒப்படைக்கப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புதிய யானை வந்திருப்பது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us