/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
சீர்காழி தாடாளன் கோவில் சொர்க்கவாசல் திறப்பு
/
சீர்காழி தாடாளன் கோவில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED : ஜன 10, 2025 07:30 AM

மயிலாடுதுறை: சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் வலது பாத தரிசனம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திரு விக்ரம நாராயண பெருமாள் எனப்படும் தாடாளன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் தனது இடது பாதத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கியவாரு உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார். இக்கோவிலில் ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் தாடாளன் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டு சாத்துமுறை நடைபெற்றது . சொர்க்கவாசல் வழியே பெருமாள் எழுந்தருள கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்..

