/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பேராசிரியர் கைது
/
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பேராசிரியர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பேராசிரியர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பேராசிரியர் கைது
ADDED : டிச 28, 2024 01:30 AM

கும்பகோணம்,:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கல்லுாரியில், அரபி வகுப்பு பேராசிரியராக பணியாற்றியவர் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ஜியாவுதீன், 43.
இவர், கல்லுாரி மாணவி ஒருவரிடம் பழகி வந்தார். மேலும், அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார் என கூறப்படுகிறது.
தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக, அவரின் பாலியல் தொல்லைக்கு ஆளான அந்த பெண், ஆடுதுறை அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார்.
ஜியாவுதீன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இந்நிலையில், ஜியாவுதீனை கல்லுாரி நிர்வாகம் நான்கு மாதங்களுக்கு முன், பணியில் இருந்து நிறுத்தியதாக கூறி, கல்லுாரியை வழக்கில் சேர்க்கக்கூடாது என கல்லுாரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.