/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமையுங்கள்: வணிகர்கள் கடையடைப்பு
/
கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமையுங்கள்: வணிகர்கள் கடையடைப்பு
கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமையுங்கள்: வணிகர்கள் கடையடைப்பு
கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமையுங்கள்: வணிகர்கள் கடையடைப்பு
ADDED : ஆக 13, 2024 09:34 AM

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமைக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையோர பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2022ம் ஆண்டு தி.மு.க., தலைமையிலான தமிழக அரசு சட்டசபையில் மாதிரி வேளூர்- கருப்பூர் இடையேயான கதவணை திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்ததாக கூறப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு கதவனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமைத்து, தண்ணீரை தேக்கி பயன்படுத்த வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம், தைக்கால், மாங்கனாம்பட்டு, மாதிரி வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.