/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி சாலை மறியல்
/
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி சாலை மறியல்
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி சாலை மறியல்
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி சாலை மறியல்
ADDED : செப் 20, 2024 06:07 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பருவம் தவறிய மழையால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறையில், ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரண தொகையாக அறிவித்த ரூ.10 கோடி இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படாததைக் கண்டித்து சிபிஎம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகளின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.