/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
திருக்கடையூர் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்
/
திருக்கடையூர் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்
ADDED : டிச 06, 2024 06:56 AM

மயிலாடுதுறை : திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில், ரூ. 3 கோடியில் செய்யப்பட்ட புதிய வெள்ளி ரத வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சென்னை தொழிலதிபர் ஜெயராமன் மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் ரூ.3 கோடியில் புதிய வெள்ளி ரதம் செய்யப்பட்டது.
அதன் வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது.
முன்னதாக, கோவில் சங்கு மண்டபத்தில் ரத பிரதிஷ்டை ஹோமம் நடந்தது. பின்னர் வெள்ளி ரதத்தில் அபிராமி அம்மன் எழுந்தருள ரத விமான கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து வெள்ளி ரத வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.