ADDED : மார் 13, 2024 12:52 AM
அ நிறம் | அளவு
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே திருச்சிற்றம்பலம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் வந்த திருப்புன்கூர் கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ், 27, சேத்துாரைச் சேர்ந்த ராணுவ வீரர் பீமாராவ், 32, திருப்புன்கூர் அருண் ஆகியோர் மதுபானம் கேட்டனர். கடையில் 'ஆடிட்டிங்' நடப்பதால், கணக்கு கொடுத்து வந்து மதுபானம் தருவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கடையின் கதவுகளை மூடி, அங்கிருந்த கேமராக்களை உடைத்து, ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்படி, மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து விமல்ராஜ், பீமாராவ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய அருணை தேடி வருகின்றனர்.
