தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/கோளறு பதிகம் பாடிய மாணவர்கள்

கோளறு பதிகம் பாடிய மாணவர்கள்

கோளறு பதிகம் பாடிய மாணவர்கள்


ADDED : மார் 02, 2026 12:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 12:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மத்திய கிழக்கில் நடக்கும் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை தருமபுரம் ஆதினத்துடன் இணைந்து 100 பாடசாலை மாணவர்கள் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஈரான் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. போர் பதற்றம் நீங்கவும், போரினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தருமபுரம் ஆதீனம் சார்பில் கோளறு பதிகம் பாடும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், தருமபுரம் தேவார பாடசாலை மாணவர்கள் 100 பேர் இணைந்து கோளறு பதிகம் மற்றும் நெடுங்களம் பதிகம் ஆகியவற்றைப் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர் இதனால் இறைவன் அருளால் போர் பதற்றம் நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us