/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
விமான நிலையத்தில் ஆட்டோ, பஸ் இயக்க மத்திய அமைச்சரிடம் சுதா எம்.பி., வலியுறுத்தல்
/
விமான நிலையத்தில் ஆட்டோ, பஸ் இயக்க மத்திய அமைச்சரிடம் சுதா எம்.பி., வலியுறுத்தல்
விமான நிலையத்தில் ஆட்டோ, பஸ் இயக்க மத்திய அமைச்சரிடம் சுதா எம்.பி., வலியுறுத்தல்
விமான நிலையத்தில் ஆட்டோ, பஸ் இயக்க மத்திய அமைச்சரிடம் சுதா எம்.பி., வலியுறுத்தல்
ADDED : டிச 27, 2024 12:39 AM
மயிலாடுதுறை:மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக மயிலாடுதுறையில் காங்., கட்சி சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என சுதா எம்.பி.., தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் சுதா எம்.பி., அளித்த பேட்டி:
மத்திய அரசு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற நினைக்கிறது. இந்தியா இந்துக்கள் நாடு என்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்த்தவர் அம்பேத்கர். அம்பேத்கரை இழிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசு செயல்படுகிறது. அதனை நாங்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டோம். அனைத்து பொருட்களும் ஜிஎஸ்டி விதித்து 2 தொழிலதிபர்களை மட்டும் மத்திய அரசு வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய தேசியத்தின் ஒட்டுமொத்த வளத்தை அனுபவிக்கும் அதானியை பிரதமர் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்.
டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட மண்டலம் என்பது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அது குறித்து எந்த தகவலும் இல்லை என்று மத்திய அரசு கூறியது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்பட போகும் பிரச்சனைகளை தடுப்பதற்கு உரிய வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். மத்திய அரசு ஆயில் நிறுவனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை டெல்டாவை பாதுகாப்பதற்கு கொடுக்க வேண்டும்.
விமான கட்டணம் அதிகரித்துள்ளது. விமான நிலையத்தில் ஆட்டோக்கள், பேருந்துகள் இயக்க அனுமதி இல்லை. வாடகை கார் ஏஜென்சிகள் மாபியா போன்று அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றனர். இரவு நேரங்களில் விமான நிலையங்களுக்கு வரும்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை தடுக்க சென்னை விமான நிலையத்தில் ஆட்டோக்கள், பேருந்துகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். பேருந்துகள் இயக்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மத்திய உள்துறை அமைச்சர் நாளை டிசம்பர் 27ம் தேதி சென்னை வருகிறார். அம்பேத்கரை விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக காங். தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார். அதன்படி மயிலாடுதுறையில் காங்., சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

