/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
டூவீலரை திருடிய வாலிபர்கள் கைது
/
டூவீலரை திருடிய வாலிபர்கள் கைது
ADDED : செப் 23, 2024 09:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த டூவீலரை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனது வீட்டில் முன்பு டூவீலரை நிறுத்தி வைத்து இருந்தார். இவரது டூவீலர் திருடு போனதை அறிந்து, அவர் அதிர்ச்சி அடைந்தார்.
புகாரின் பேரில், முளப்பாக்கம் மதகடி பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் கோபிநாத்.20, மூங்கில் தோட்டம் மாந்தோப்பு தெரு சேர்ந்த செந்தில் மகன் அருள் பாண்டி, 19, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டூவீலரை போலீசார் மீட்டனர்.