ADDED : ஜூலை 26, 2026 10:13 PM

மயிலாடுதுறை : சீர்காழி அருகே வேலி தகராறில் கீழே விழுந்த தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமயிலாடியை சேர்ந்தவர் சுபாஷ், 55; இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே வேலி வைப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தார் சேர்ந்து, சுபாைஷ தாக்கியுள்ளனர். அப்போது, கீழே விழுந்த சுபாஷ் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இறந்த சுபாஷின் மனைவி தெனிஷ் ராபியா கொடுத்த புகாரில், ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, சுபாஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
