/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு இரட்டை 'ஆயுள்'
/
சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு இரட்டை 'ஆயுள்'
ADDED : டிச 20, 2024 01:39 AM
மயிலாடுதுறை:சீர்காழி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்,35. இவர் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி, 10ம் வகுப்பு படித்த மாணவி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்தார்.
திருவெண்காடு போலீசார் போக்சோ வழக்கு பதிந்து கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, கல்யாணசுந்தரத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.