/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் பறித்த வாலிபர் கைது
/
பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் பறித்த வாலிபர் கைது
பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் பறித்த வாலிபர் கைது
பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் பறித்த வாலிபர் கைது
ADDED : டிச 24, 2024 07:27 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபானா ஜாஸ்மின்,28. விவாகரத்து பெற்றவர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கும், திருவாவடுதுறையை சேர்ந்த ஜாகீர்உசேன்,23, என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஜாகீர்உசேன், ஷிபானா ஜாஸ்மினை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார்.
இதில் கர்ப்பமடைந்த ஷிபானா ஜாஸ்மினை திருவாவடுதுறையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஜாகீர் உசேன், அவரது தாயார் சையது சுல்தான் பீவி, சகோதரர் நசிர் முகமது, உறவினர் ரசூல் பீவி ஆகியோர் மாத்திரை கொடுத்து கட்டாய கருக்கலைப்பு செய்து வீட்டை விட்டு விரட்டினர்.
அதையடுத்து, ஷிபானா ஜாஸ்மின் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில் ஜாகீர் உசேன் பல தவணைகளில் தன்னிடம் இருந்து 14 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டார்.
அவருடன் தனிமையில் இருந்தபோது ஆபாசமாக வீடியோக்கள் எடுத்து வைத்துக் கொண்டு வெளியில் சொன்னால் வீடியோக்களை வெளியில் விட்டு விடுவேன் என மிரட்டுகிறார் கூறி உள்ளார்.
புகாரின் பேரில் ஜாகீர் உசேன், அவரது தாயார் சையது சுல்தான் பீவி, சகோதரர் நசிர் முகமது, உறவினர் ரசூல் பீவி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்தனர். ஜாகீர் உசேனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.