/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
கிடப்பில் சி.பி.சி.எல்., விரிவாக்க பணி விரைந்து முடிக்க 3 கிராம மக்கள் தர்ணா கிடப்பில் சி.பி.சி.எல்., விரிவாக்க பணி
/
கிடப்பில் சி.பி.சி.எல்., விரிவாக்க பணி விரைந்து முடிக்க 3 கிராம மக்கள் தர்ணா கிடப்பில் சி.பி.சி.எல்., விரிவாக்க பணி
கிடப்பில் சி.பி.சி.எல்., விரிவாக்க பணி விரைந்து முடிக்க 3 கிராம மக்கள் தர்ணா கிடப்பில் சி.பி.சி.எல்., விரிவாக்க பணி
கிடப்பில் சி.பி.சி.எல்., விரிவாக்க பணி விரைந்து முடிக்க 3 கிராம மக்கள் தர்ணா கிடப்பில் சி.பி.சி.எல்., விரிவாக்க பணி
ADDED : மே 08, 2024 01:05 AM

நாகப்பட்டினம்:'சி.பி.சி.எல்., தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, மூன்று ஆண்டுகளாகியும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. விரைந்து முடித்து, நிலம் அளித்தவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும்' என, மூன்று கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், பனங்குடியில், 1993ல், 618 ஏக்கரில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல்., தொழிற்சாலை துவக்கப்பட்டது.
காவிரி படுகையில் நிலத்திற்கு அடியில் கிடைக்கும் கச்சா எண்ணெய், ஓ.என்.ஜி.சி., வாயிலாக உறிஞ்சப்பட்டு, குழாய் வழியாக சி.பி.சி.எல்., தொழிற்சாலைக்கு எடுத்து வரப்பட்டு, எல்.பி.ஜி., வாயு, நாப்தா, டீசல், மண்ணெண்ணெய், பர்னஸ் ஆயில், தார் பிரித்தெடுக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலையில் நேரடியாக 600 பேர், ஒப்பந்த அடிப்படையில் 2,000 பேர், மறைமுகமாக 5,000 பேர் பணியாற்றினர். உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலையை மேம்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக 32,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு, கோபுராஜபுரம், நரிமனம், பூதங்குடி, முட்டம், பனங்குடி ஆகிய ஊராட்சிகளில் இருந்து மேலும் 606 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தர மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது.
நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்த போது, 2021 பிப்., 17ம் தேதி, பிரதமர் மோடி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக பெரும்பாலான நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் கூடுதல் இழப்பீடு கேட்டு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த, 2019 பிப்., 1ம் தேதி தொழிற்சாலையில் சுத்திகரிப்பு பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பனங்குடி, கோபுராஜபுரம், நரிமனம் ஊராட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், சி.பி.சி.எல்., விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, நிறுவனத்தின் எதிரில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
சி.பி.சி.எல்., விரிவாக்கத்திற்காக மூன்று ஊராட்சிகளில் இருந்து 618 ஏக்கர் நிலம் தேவை என்றனர்.
இதில், 400 விவசாயிகள் 380 ஏக்கர் அளித்துள்ளோம். சி.பி.சி.எல்., இயங்க ஆரம்பித்தால், இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மாவட்டம் செழிக்கும் என நிலம் கொடுத்தோம்.
இரண்டு ஆண்டுகள் கடந்தும் விரிவாக்க பணி துவங்கவில்லை. வேலையும் வழங்கப்படவில்லை. விரிவாக்க பணியை துவக்காவிட்டால், விவசாயிகளிடம் நிலத்தை திருப்பி வழங்க வேண்டும். விவசாய கூலி தொழிலாளர்களுக்கு பாரபட்சமின்றி வெளிப்படையாக இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

