/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
வேளாங்கண்ணி கடலில் திண்டுக்கல் சிறுவர்கள் பலி
/
வேளாங்கண்ணி கடலில் திண்டுக்கல் சிறுவர்கள் பலி
ADDED : ஆக 12, 2024 10:41 PM
நாகப்பட்டினம் : நாகை அடுத்த வேளாங்கண்ணியில், 5 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ - மாணவியர் பங்கேற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகள், நேற்று முன்தினம் நடந்தது. தனியார் அமைப்பு நடத்திய இந்த போட்டிகளில் பங்கேற்க, திண்டுக்கல், தனியார் பள்ளிகளில் பயிலும் 45 மாணவர்கள், பயிற்சியாளர் பழனிசாமி தலைமையில் வேளாங்கண்ணி வந்தனர்.
இதில் 13 மாணவர்கள் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள கடலில் குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில், திண்டுக்கல், நிலக்கோட்டையை சேர்ந்த விஷ்வா, 11, வீரமலை, 13, ஆகியோர் சிக்கி, கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அங்கிருந்தோர் மீட்க முயற்சித்தும் முடியவில்லை. பல மணி நேரத்திற்கு பின் இருவர் உடல்களும் கரை ஒதுங்கின.
இந்த சோக விபத்து குறித்து, கீழையூர், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரிக்கின்றனர்.