
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்: நாகையைச் சேர்ந்தவர் கணேசன், 74. இவரது மனைவிக்கு சொந்தமான நிலம், கீழ்வேளூர் அடுத்த அகரகடம்பனுாரில் உள்ளது. பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய அகரகடம்பனுார், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கணேசன் விண்ணப்பித்தார்.
பெயர் மாற்றம் செய்ய, 10,000 ரூபாய் லஞ்சம் தருமாறு, வி.ஏ.ஓ., செல்வி கேட்டார். கணேசன் புகாரின் படி, நாகை லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ரசாயனம் தடவிய 10,000 ரூபாயை, வி.ஏ.ஓ., செல்வி பெறும்போது அவரை கைது செய்தனர்.