/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நாகை பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன், கூட்டாளி கைது
/
நாகை பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன், கூட்டாளி கைது
நாகை பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன், கூட்டாளி கைது
நாகை பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன், கூட்டாளி கைது
ADDED : ஆக 03, 2024 11:33 PM

நாகப்பட்டினம்: நாகையில், பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கள்ளக்காதலன் மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
நாகை, வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஈஸ்வரி,38. கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரமேஷ் பிரிந்து சென்று விட்டார்.
இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வந்த ஈஸ்வரி, கடந்த 1ம் தேதி, இரவு தனது வீட்டின் வாசலில் நின்றபோது, பதிவெண் இல்லாத ஆட்டோவில் வந்திறங்கிய நபர், ஈஸ்வரியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றார். இதில் ஈஸ்வரி இறந்தார்.
வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்தனர். குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில், ஈஸ்வரியின் நடத்தை சரியில்லாததால் 2 ஆண்டுகளுக்கு முன் ரமேஷ் பிரிந்து சென்றார்.
பொரவாச்சேரி முருகேசன் மகன் ராஜா,46, என்பவருக்கும் ஈஸ்வரிக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. தற்போது வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததால், ஆவேசமடைந்த கள்ளக்காதலன் ராஜா, காதலி ஈஸ்வரியை வெட்டி கொலை செய்ததும், அவரது நண்பர் கருப்புசாமி,37, உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இருவரையும் போலீசார் நேற்று சுற்றி வளைத்து கைது செய்யும் போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடிய ராஜாவுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், ராஜாவுக்கு மாவு கட்டு போட்டு விசாரித்து வருகின்றனர்.