/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
கடலுாரில் அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி; 24 பேர் காயம்
/
கடலுாரில் அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி; 24 பேர் காயம்
கடலுாரில் அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி; 24 பேர் காயம்
கடலுாரில் அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி; 24 பேர் காயம்
ADDED : ஜூலை 08, 2024 06:56 AM

ரெட்டிச்சாவடி: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பச்சையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 44, அரசு பஸ் டிரைவர்.
இவர் நேற்று முன்தினம், சென்னையில் இருந்து வேதாரண்யம் செல்லும் அரசு பஸ்சை ஓட்டிச் சென்றார். நாகப்பட்டினம் மாவட்டம், மணக்குடியைச் சேர்ந்த கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தி, 41, மற்றும் 48 பயணியர் பஸ்சில் பயணம் செய்தனர்.
புதுச்சேரி - கடலுார் சாலையில், ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் மலட்டாறு பாலம் அருகில், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் இரவு 11:00 மணிக்கு சென்றபோது மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில், டிரைவர் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் 11 மாத குழந்தை உட்பட, 24 பேரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கடலுார், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
விபத்து காரணமாக புதுச்சேரி - கடலுார் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ரெட்டிச்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.