/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
தனியார் கல்லுாரிக்கு ரேஷன் பொருள் கடத்திய இருவர் கைது; தாளாளர் ஓட்டம்

ADDED : மார் 12, 2025 01:23 AM

நாகப்பட்டினம், : நாகை அடுத்த கீச்சாங்குப்பம், மீனவர் ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தப்படுவதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்றபோது, 'டாடா ஏஸ்' வாகனத்தில், 50 கிலோ எடையுடைய 25 அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன.
போலீசார் விசாரித்ததில், நாகையில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரிக்கு கடத்துவது தெரிந்து, அந்த கல்லுாரியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், 55 மூட்டைகளில் 2,700 கிலோ ரேஷன் அரிசி, எட்டு மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் கோதுமை, 150 கிலோ ரேஷன் பருப்பு பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர்.
ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் விற்பனையாளர் ராவணன், 58, டிரைவர் சுந்தர், 47, ஆகிய இருவரை கைது செய்தனர். தப்பியோடிய தனியார் கல்லுாரி தாளாளர் தமிழ்செல்வியை தேடி வருகின்றனர்.