/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
வேளாங்கண்ணி தேவாலயம் அழகுப்படுத்தும் பணி தீவிரம்
/
வேளாங்கண்ணி தேவாலயம் அழகுப்படுத்தும் பணி தீவிரம்
ADDED : ஆக 02, 2024 11:46 PM

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, தேவாலயம் அழகுப்படுத்தும் பணி விறு விறுப்பாக நடக்கிறது.
நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும், ஆரோக்கிய மாதா தேவாலயத்தின் ஆண்டு திருவிழா வரும் ஆக.,29ம் தேதி துவங்கி செப்., 8ம் தேதி வரை நடக்கிறது.
விழா துவக்க நிகழ்ச்சியாக வரும் 29ம் தேதி மாலை நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மேலும், விழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்நாட்களில் தேவாலயம் மின்னொளியில் ஜொலிக்கும்.
இவ்வாண்டு திருவிழாவை முன்னிட்டு தேவாலயம் மற்றும் சுற்றுப்புற தேவாலயங்கள் வர்ணம் பூசி அழகுப்படுத்தும பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. மேலும் பக்தர்கள் தங்குவதற்கு பல்வேறு இடங்களில் முகாம்கள், குடிநீர், கழிவறை, குளியலறை போன்ற அடிப்படை வசதிகள் தேவாலயம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழா நாட்களில் தேவாலயம் மேல், கீழ் கோவில்கள் மற்றும் விண்மீன் தேவாலயத்தில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு மலையாளம், ,கன்னடம், மராத்தி, கொங்கணி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலி நடக்கும். தேவாலய கலையரங்கத்தில் மாதா மன்றாட்டு நற்கருணை ஆசிர், நவநாள் ஜெபம் நடைபெறும்.