/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
டாஸ்மாக் மூடக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் மூடக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 10:43 PM

நாகப்பட்டினம்:டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி, நாகையில், விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை அடுத்த தெற்கு பொய்கை நல்லுாரில், கடந்த 19ம் தேதி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தாய், மகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளம் விதவைகள் அதிகரிப்புக்கு காரணமான டாஸ்மாக்கை மூட வேண்டும். போதை பொருட்களை ஒழிக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை, கலெக்டர் அலுவலக வாயிலில், விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவி கஸ்துாரி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.