/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
இலங்கைக்கு கடத்த எடுத்து சென்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்த எடுத்து சென்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கடத்த எடுத்து சென்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கடத்த எடுத்து சென்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஏப் 25, 2025 01:39 AM
நாகப்பட்டினம்:நாகை அருகே, கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
நாகை, வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, இ.சி.ஆர்., சாலையில் செல்லூர் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேளாங்கண்ணி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், பொட்டலமாக பேக்கிங் செய்யப்பட்டு,10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சேலம், பவளத்தானூர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கவி வர்ணன்,26, ஜலகண்டபுரம், விக்னேஷ்,21, இருவரும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, வேதாரண்யம் கடல் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்க கடத்தி வந்தது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்து கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.