ADDED : ஜூலை 08, 2025 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்: இலங்கைக்கு கடத்த வைத்திருந்த, 100 கிலோ கடல் அட்டைகள் மற்றும் சங்குகளை, கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை, சால்ட் ரோடு பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் அருகே, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாரை பார்த்ததும், கடல் அட்டைகளை பதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தப்பியோடினர். சோதனையில், பதப்படுத்தப்பட்டு இலங்கைக்கு கடத்துவதற்காக, 100 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 50 கிலோ சங்குகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
கடல் அட்டைகள், சங்குகள் மற்றும் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், அடுப்புகளை போலீசார் பறிமுதல் செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

