/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நாகையில் முற்றுகை ஆசிரியர்கள் 110 பேர் கைது
/
நாகையில் முற்றுகை ஆசிரியர்கள் 110 பேர் கைது
ADDED : ஜூலை 04, 2024 02:15 AM

நாகப்பட்டினம்,:நாகையில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட 110 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசாணை 243யை ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் வழக்கு முடியும் வரை பணியிட மாறுதல், கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நாகப்பட்டினம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் லட்சுமிநாராயணன் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட 110 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.