/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
பாடம் கற்றுக்கொள்ளாத பொதுப்பணித்துறை
/
பாடம் கற்றுக்கொள்ளாத பொதுப்பணித்துறை
ADDED : ஜன 10, 2024 09:29 PM

நாகப்பட்டினம்:நாகை, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் தாசில்தார் அலுவலக கட்டடம் பழுதடைந்ததால், புதிய கட்டடம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் 4.97 கோடி ரூபாய் மதிப்பில், 12,696 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, ஆக., துவங்கிய இப்பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அலுவலகம் கட்டுமானப் பணிக்கு ஒதுக்கப்பட்ட இடம் தாழ்வான பகுதி என்பதால், சாலை உயரத்தில் இருந்து கட்டடத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் பெரளவிற்கு 2 அடி உயரத்திற்கு சமன் செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கியன. இதனால் லேசான மழைகளுக்கே கட்டடத்தை சுற்றி வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
இது, அரசு அலுவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் கூறுகையில், “தாழ்வான பகுதிகளில் தான் இடம் ஒதுக்கி தரப்படுகிறது. கட்டடத்திற்கு மட்டுமே திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. இருப்பினும், 3 அடி உயர்த்தப்படுகிறது. மழைக்காலங்களில் பார்ப்பதற்கு அப்படி தான் தெரியும், வெயில் காலங்களில் பாதிப்பு தெரியாது,” என்றார்.

