/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
லோக்சபா தேர்தலை புறக்கணிக்கிறோம் 3 கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
/
லோக்சபா தேர்தலை புறக்கணிக்கிறோம் 3 கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
லோக்சபா தேர்தலை புறக்கணிக்கிறோம் 3 கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
லோக்சபா தேர்தலை புறக்கணிக்கிறோம் 3 கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
ADDED : பிப் 01, 2024 10:54 PM

நாகப்பட்டினம்:நாகையில், நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதால், எந்த அரசியல்வாதியும் கிராமத்திற்குள் வர அனுமதிக்க மாட்டோம் என, மூன்று கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
நாகை அருகே சி.பி.சி.எல்., தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக, பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் பகுதியில் 350 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் படுகிறது. இதன் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு சிட்டா, அடங்கல் வழங்காததால், சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விளைநிலங்கள் தரிசாக மாறியுள்ளன.
இந்நிலையில் மூன்று கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் ஆய்வுக்கு சென்றிருந்தால், வருவாய் கோட்டாட்சியர் கண்ணனிடம் தனி, தனியாக மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:
மூன்று கிராமங்களிலும் கையகப்படுத்தும் விளைநிலங்களுக்கு சதுர அடி 5 ரூபாய் என நிர்ணயம் செய்தனர். ஆனால் அந்த தொகையைக்கூட வழங்கவில்லை.
நான்கு ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளேளாம். பல முறை கலெக்டரை சந்தித்து முறையிட்டும், பல போராட்டங்களை நடத்தியும், சி.பி.சி.எல்., நிறுவனம் செவி சாய்க்கவில்லை.
எனவே எதிர்வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்த அரசியல்வாதியையும் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால் குடியுரிமை அடையாளமான ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டு, அகதிகளாக வாழ முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

