/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
காதலியை அழைத்து வந்து திருமணம் காதலன் குடும்பத்தினருக்கு சரமாரி வெட்டு வேளாங்கண்ணியில் பரபரப்பு

ADDED : டிச 12, 2025 04:37 AM
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணிக்கு காதலியை அழைத்து வந்து திருமணம் செய்த காதலன் உள்ளிட்ட குடும்பத்தாரை சரமாரியாக வெட்டி, பெண்ணை அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு, நாகவாடாவை சேர்ந்தவர் டேனியல், 50. இவரது மனைவி கலையரசி, 40. இவர்களது மகன் ராகுல், 22; இவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். இவர்கள் திருமணத்திற்கு, பெண் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராகுல் தனது குடும்பத்தினர் ஆதரவுடன், கடந்த 9ம் தேதி, காதலியை வேளாங்கண்ணி அழைத்து வந்து நேற்று முன்தினம் திருமணம் செய்துள்ளார். ராகுலின் பெற்றோர் மற்றும் நண்பர் பிரகாஷ், 34. திருமணம் செய்து வைத்தனர்.
தகவலறிந்த பெண் குடும்பத்தார் நேற்று காலை, வேளாங்கண்ணி வந்து ராகுல் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ராகுல் மற்றும் அவரது நண்பர் பிரகாஷ், பெற்றோர் டேனியல், கலையரசி ஆகியோர் கத்தியால் வெட்டிவிட்டு, பெண்ணை அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்தவர்கள் காயமடைந்த நால்வரையும் மீட்டு, நாகை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து, சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில், பெண் குடும்பத்தார் சென்ற காரை விரட்டி சென்றனர். கடலுார் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே சென்ற, பெங்களூரு, குபேந்திரா ராவ் மகன்கள் வெங்கோராவ்,30, ராம்நாத் ராவ்,40, ஆகிய இருவரையும் கைது செய்தனர். மணப்பெண்ணுடன் தப்பிய அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.