/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
தண்ணீர் திருடிய கல்வி நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம்: கலெக்டர் அதிரடி
/
தண்ணீர் திருடிய கல்வி நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம்: கலெக்டர் அதிரடி
தண்ணீர் திருடிய கல்வி நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம்: கலெக்டர் அதிரடி
தண்ணீர் திருடிய கல்வி நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம்: கலெக்டர் அதிரடி
ADDED : நவ 09, 2024 10:53 PM
நாகப்பட்டினம்:நாகையில், கூட்டு குடிநீர் திட்ட குழாயில் முறைகேடாக குழாய் பொருத்தி, பல லட்சம் லிட்டர் குடிநீரை உறிஞ்சிய கல்வி நிறுவனத்திற்கு, 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கலெக்டர் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக, கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாக கொண்டு, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 4.88 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
கூட்டு குடிநீர் திட்டத்தில் பலனடையும் பகுதிகளில் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்களிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில், குடியிருப்புகளில் ஆய்வு நடத்தும் அதிகாரிகள், கூட்டு குடிநீர் செல்லும் ராட்சத குழாய்களில், முறையற்ற வகையில் குழாய்களை இணைத்து மோட்டார் வாயிலாக தண்ணீர் உறிஞ்சிய இணைப்புகளை மட்டும் துண்டித்து கடமையை முடித்துக் கொண்டனர்.
இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாடு குறித்து கலெக்டர் ஆகாஷ், நேரிடையாக கூட்டு குடிநீர் வழித்தடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், திருமருகலில் இருந்து நாகைக்கு செல்லும் பிரதான நீர் உந்து குழாயில் முறையற்ற வகையில் புதிதாக ஒரு இணைப்பை ஏற்படுத்தி, நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீரை, இ.ஜி.எஸ்., பிள்ளை பொறியியல் கல்லுாரி நிர்வாகம் எடுத்து வந்தது தெரியவந்தது.
தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட கல்வி குழுமத்திற்கு, தண்ணீர் அளவிற்கேற்ப, 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார். முறையற்ற இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனர்.