ADDED : ஜூன் 12, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே ஆடு மேய்க்க சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை அருகே கிழாய் பகுதியை சேர்ந்தவர் ராஜா.60. நேற்று முன்தினம் ஆடுகளை அருகில் உள்ள வயல்வெளி பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பியை கவனிக்காமல் சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் விரைந்து சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துடன், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.