/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
கலெக்டரின் தாய் மொழியில் கோரிக்கை வைத்த விவசாயி
/
கலெக்டரின் தாய் மொழியில் கோரிக்கை வைத்த விவசாயி
ADDED : ஏப் 04, 2025 02:38 AM
நாகப்பட்டினம்:நாகையில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், எம்புரான் திரைப்படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என, விவசாயி மலையாளத்தில் பேசி கோரிக்கை விடுத்தார்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நேற்று நடந்தது. அனைத்து துறை அலுவலர்கள், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலர் தமிழ்செல்வன் பேசுகையில், 'எம்புரான் என்ற திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு, தமிழகம் முழுதும் திரையிடப்பட்டு வருகிறது.
இப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இடம் பெற்றுள்ளது. இதனால் இரு மாநில மக்களின் நட்புணர்வு பாதிக்கப்படும். தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும்' என, மலையாளத்தில் கோரிக்கை விடுத்தார்.
கலெக்டர் ஆகாஷ் கேரளத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு எளிதில் புரியும் வகையில் விவசாயி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

