/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
வேளாங்கண்ணி ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
/
வேளாங்கண்ணி ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
ADDED : ஏப் 18, 2025 02:04 AM

நாகப்பட்டினம்,:ஈஸ்டரை பண்டிகை முன்னிட்டு நேற்று வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில், பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை வரும் 20 ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முன் உள்ள ஒரு வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஞாயிறு குருத்தோலை அனுசரிக்கப்பட்டு, நாள்தோறும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
நேற்று பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டு, தாழ்மையை கற்றுக் கொடுக்கும் விதமாக ஏசு தனது சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில், நாகை அடுத்த வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில், 12 உதவி பாதிரியார்களின் பாதங்களை பங்கு பாதிரியார் அற்புதராஜ், பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் தலைமையிலான பாதிரியார்கள் கழுவினர்.
தேவாலய அதிபர் இருதயராஜ் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.