/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி கிராம சபை கூட்டங்கள் பிசுபிசுப்பு
/
உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி கிராம சபை கூட்டங்கள் பிசுபிசுப்பு
உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி கிராம சபை கூட்டங்கள் பிசுபிசுப்பு
உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி கிராம சபை கூட்டங்கள் பிசுபிசுப்பு
ADDED : ஜன 27, 2025 03:58 AM
நாகப்பட்டினம்: நாட்டின், 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுதும் அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. பெரும்பாலான மாவட்டங்களில், ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம், கடந்த, 5ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அரசு அதிகாரிகளால் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
பல ஊராட்சிகளில் மக்கள் பங்கேற்க ஆர்வமின்றி, ஊராட்சி செயலர்களால் கடமைக்காக கூட்டம் பதிவு செய்யப்பட்டதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
முன்னாள் பஞ்., பிரதிநிதிகள் கூட்டமைப்பு கூடுதல் ஒருங்கிணைப்பாளர் சிவராசு கூறியதாவது:
உள்ளாட்சி பதவிக்காலம் முடியும் முன்பே, தேர்தல் நடத்தி முடிப்பதை, இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டாயமாக்கியுள்ளது. வார்டு மறுவரையறை பணிகளை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமலிருக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 28 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என, 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.