/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நாகூர் ஆண்டவர் தர்கா ஆதினம் பொறுப்பேற்பு
/
நாகூர் ஆண்டவர் தர்கா ஆதினம் பொறுப்பேற்பு
ADDED : மே 23, 2025 02:09 AM
நாகப்பட்டினம்:நாகை அடுத்த நாகூர் தர்கா ஆதினம் பாரம்பரிய முறைப்படி பொறுப்பேற்றார்.
நாகை அடுத்த நாகூரில் பிரசித்திப்பெற்ற ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. 470 ஆண்டுகள் பழமைவாய்ந்த தர்கா நிர்வாகத்தை 11 பேர் அடங்கிய அறங்காவலர்கள் நிர்வகித்து வருகின்றனர். முன்னால் பரம்பரை டிரஸ்டி செய்யது காமில், கடந்த 19 ம் தேதி, உடல் நலக்குறைவால் இறந்தார்.
இதையடுத்து தர்கா பாரம்பரிய வழக்கப்படி 3 வது நாளான நேற்று, நாகூர் ஆண்டவரின் 11 வது தலைமுறை ஆதினமாக, ஹாஜி செய்யது முஹமது கலிபா சாஹிப் காதிரி ஹாசிமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாரம்பரிய முறைப்படி நாகூர் ஆண்டவரின் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு, தர்காவில் குண்டுகள் முழங்க, சன்னதி திறக்கப்பட்டு பாத்திஹா நிகழ்ச்சி நடந்தது.