ADDED : மே 02, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்:நாகையில், போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சேர்ந்தவர் வினோத்,38. நாகை ஆயுதப்படை போலீஸ்காரரான இவர், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யிடம் டிரைவராக பணியாற்றி வந்தார். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். காடம்பாடியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வினோத், நள்ளிரவில் அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.