/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
குழந்தைகளிடம் அத்துமீறல் மனநல ஆலோசகர் கைது
/
குழந்தைகளிடம் அத்துமீறல் மனநல ஆலோசகர் கைது
ADDED : செப் 21, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்,:நாகையில் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் 55 சிறுமியர் பராமரிக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க, மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ், 42, என்பவரை நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், குழந்தைகள் நல குழுவிடம், ஐந்து மாணவியர், சத்ய பிரகாஷ் தங்களிடம் பாலியல் ரீதியாக பேசுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் சசிகலா புகாரில், நாகை மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, சத்யபிரகாஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.