/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நாகை -- இலங்கை இடையே கப்பல் கட்டணம் குறைப்பு
/
நாகை -- இலங்கை இடையே கப்பல் கட்டணம் குறைப்பு
ADDED : டிச 18, 2024 02:30 AM

நாகப்பட்டினம்:இந்தியா- -- இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட, நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு பயணியர் கப்பல் சேவையை, கடந்த ஆண்டு, அக்., 14ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
பருவநிலை மாற்றத்தால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. ஜன., 2ம் தேதி முதல் பயணியர் கப்பல் சேவை நாகப்பட்டினத்தில் இருந்து மீண்டும் துவங்குகிறது.
வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இரு மார்க்கத்திலும் கப்பல் இயங்கும். மார்ச் முதல் கூடுதலாக ஒரு பயணியர் கப்பல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இருவழி பயணத்தில் முன்பு, 9,700 ரூபாயாக இருந்த கட்டணம், 8,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு பயணிக்கு, 10 கிலோ எடை இலவசமாக அனுமதிக்கப்படும். எடை அதிகரித்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என, கப்பல் சேவையை இயக்கும் தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.