ADDED : நவ 07, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்; நாகை அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் தெற்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்,20. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த 30ம் தேதி இரவு, வீரன் குடிகாடு என்ற பகுதியில் நின்றிருந்த ராஜேஷை சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்து, தப்பினர். சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில், வீரன்குடிகாடு மகாகுமார்,26, வேளாங்கண்ணி ஆகாஷ்,22, சேதுபதி,27, ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த மூவரையும், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.